ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு..!
ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். கோவில்கள் தொடர்பாக, பல்வேறு வழக்குகள் தொடர்ந்து நடத்தி வருபவர்.
சில நாட்களுக்கு முன்பு அவர் புதிய சர்ச்சையில் சிக்கினார். அதாவது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும், 3 ஜீயர்களையும் தொடர்புப்படுத்தி அவர் பேசும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ரங்கராஜன் நரசிம்மன் பேசிய தகவல் தான் சர்ச்சையை கிளப்பியது.
இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரின் போில் கடந்த 15ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்தனர்.ஸ்ரீரங்கம் சென்று வீட்டில் இருந்த ரங்கராஜன் நரசிம்மனை போலீசார் கைது செய்து வாகனத்தில் சென்னை அழைத்து சென்றனர்.
இந்நிலையில் தான் தற்போது ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரங்கராஜன் நரசிம்மன் இதற்கு முன்பு பெண் வழக்கறிஞர் பற்றி அவதூறான கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ரங்கராஜன் நரசிம்மன் மீதுபெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.