உ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்.. இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை !

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான தலித் பெண் ஒருவர், நான்கு இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அவர் வெளியில் சொல்லாமல் இருக்க அவரின் நாக்கை அந்த கொடூரர்கள் வெட்டியுள்ளனர். மேலும் அவரின் முதுகு தண்டுவடம், கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் கொடூரமாக தாக்கி ரத்த வெள்ளத்தில் சாலையில் வீசியும் சென்றனர். மருத்துவமனையில் உயிருக்கு போடிய அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பால்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது தலித் பெண் கடந்த நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்குச் சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அப்பெண் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று இரவு கையில் குளுக்கோஸ் ஊசியுடன் வீடு திரும்பினார்.
ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக அப்பெண்ணி அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணையில் அப்பெண் இரண்டு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பான புகாரில் கொடூரர்கள் இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து இரு பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் அம்மாநில எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கும், தலித் சமூகத்தினருக்கும் பாதுகாப்பு இல்லையென புகார் கூறி வருகின்றனர்.
newstm.in