ஹத்ராஸில் மீண்டும் ஒரு கொடூரம்.. சிறுமியை தூக்கிக்சென்று சீரழித்த சிறுவர்கள் !

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் சமீபத்தில் தலித் சமூக இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பெண்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை நிகழ்வு குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ஹத்ராஸில் மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹத்ராஸில் நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தனியாக அழைத்துச்சென்றுள்ளனர்.
பின்னர் ஆள்நடமாட்டம் இல்லா இடத்தில் வைத்து சிறுமியை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், கைதான சிறுவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in