வெளியான அறிவிப்பு..! வெளிமாநில ஆம்னி பஸ்கள் வழக்கம் போல் இயங்குமா ?
வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை கடந்த 17-ம் தேதி முதல் தடை விதித்தது. இதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் ஆல் இந்தியா பெர்மிட் மூலம் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்கிக் கொள்ளலாம். அந்த பஸ்களை சிறை பிடிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலமாக அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தற்போது வழக்கம் போல வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களை நேற்று முதல் இயக்கத் தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் , கொச்சின், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு செல்லக் கூடிய வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. அதேசமயம் தமிழகத்திற்கு உள்ளேயே வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தற்போது வரை இயக்கவில்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.