வெளியான அறிவிப்பு..!லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் மிஸ்டர் பாரத்..!
மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பின் ‘கைதி’, ’மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களை இயக்கினார். இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘கூலி’ படத்தை முடித்ததும் அவர் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனமான G squad தயாரிக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு ஒன்றை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு பொம்மை துப்பாக்கியுடன் போஸ்டர் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிச்சாமி, சுதன் சுந்தரம் போன்றவர்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த புதிய படத்திற்கு மிஸ்டர் பாரத் என பெயர் வைத்துள்ளனர்.
இதை அந்த அறிவிப்பு வீடியோ உங்களுக்காக