1. Home
  2. தமிழ்நாடு

"அன்னபூரணி" திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கம்!!

Q

ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘அன்னபூரணி’. நயன்தாரா, நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
தமன் இசை அமைத்துள்ளார். நயன்தாராவின் 75-வது படமாக உருவானது .இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டே வெளிவந்த போதும், படத்தின் வேலைகள் சிறிது தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டன. அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல்ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்ற இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த டிச.29ஆம் தேதி வெளியானது.ஆனால் மெதுவாக நகரும் திரைக்கதை மற்றும், பலவீனமான காட்சிகளாலும் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் அன்னபூரணி திரைப்படம் ஆண்டி இந்து திரைப்படம் என்றும் லவ், ஜிஹாத் பிரச்னையை இத்திரைப்படம் ஊக்குவிப்பதாகவும், இப்படத்தின் மீதும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீஃபைவ் நிறுவனங்களின் மீது மும்பை காவல்துறையிடம் முன்னாள் ஷிவசேனா தலைவர் ரமேஷ் சொலான்கி புகாரளித்திருந்தார்.
இந்நிலையில், நெட்ஃப்ளிஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like