பெண் சாமியார் அன்னபூரணிக்கு 3வது திருமணம்..!
பெண் சாமியார் அன்னபூரணி திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் அமைத்து செயல்பட்டு வருகிறார். ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.அன்னபூரணிக்கு இந்த திருமணம் நடந்தால் அது 3வது திருமணமாகும். ஏனென்றால் அவர் இதற்கு முன்பு 2 திருமணங்கள் செய்துள்ளார். முதல் திருமணத்தின்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு அவர் பிரிந்தார். அதன்பிறகு 2வதாக அரசு என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் ஈரோட்டில் வசித்து வந்தனர்.காதல் கணவர் அரசு இறந்த பிறகு அன்னபூரணி 'அன்னபூரணி அரசு அம்மன்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது தான் தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தான் அன்னபூரணி தனது பேஸ்புக் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை செய்துள்ளார். அந்த அறிவிப்பின் மூலம் அவர் 3வது திருமணம் செய்ய உள்ளது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அன்னபூரணி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன். அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும்.
என்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உங்கள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்க செய்து உங்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாட வைப்பதற்கு அளப்பறிய சக்தியுடனும் அளப்பறிய அருளுடனும் உங்களுக்காக வீற்றிருக்கும் உங்கள் அன்பு அன்னை.
மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன்.இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை சேவையாகதான் செய்வேன். சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன்.