1. Home
  2. தமிழ்நாடு

இன்று தொடங்குகிறது அண்ணாமலையின் பாத யாத்திரை..! 1700 கி.மீ கால்நடையாகவும், 900 கி.மீ வாகனத்திலும் யாத்திரை..!

1

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், ‛ என் மண், என் மக்கள்' என்ற பாத யாத்திரையை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் துவங்குகிறார். இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா துவக்கி வைத்து பேச உள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ராமேஸ்வரத்தில் 'என் மண், என் மக்கள்' யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறும். ஜூலை 29-ல் யாத்திரை தொடங்கும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் யாத்திரை செல்லவுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் முதல் கட்ட யாத்திரைக்கு பாஜக மூத்த தலைவர்கள் யாத்திரைக்கு தலைமை வகிப்பார்கள். முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.

1

 ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெறும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால்நடையாகவும், மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகன யாத்திரையும் நடைபெறும். 1700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும். ஜன.11-க்குள் முன்பு யாத்திரை முடிக்கப்படும். யாத்திரை நிறைவு நாள் பிரமாண்டமாக நடத்தப்படும்.

யாத்திரை தொடக்க விழாவுக்கு கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like