1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணத்தின் அக்டோபர் மாத நடைபயண விபரம் வெளியீடு..!

1

தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை, தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும், 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மூலம், நமது மாநிலத் தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், மக்களைச் சந்தித்து வருவது நீங்கள் அறிந்ததே. 

உங்கள் பேராதரவோடு 'என் மண் என் மக்கள்' முதல் இரண்டு கட்டப் பயணத்தின் வெற்றியை அடுத்து, மூன்றாவது கட்ட, அக்டோபர் மாதப் பயணப் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்கள் நல் ஆதரவை வழங்கி, 'என் மண் என் மக்கள் நடைபயணத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணமானது அக்டோபர் மாதம் 04ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கி அக்டோபர் 31ம் தேதி தஞ்சாவூரில் நிறைவு பெறுகிறது. 


 

Trending News

Latest News

You May Like