1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலை போட்ட குண்டு : ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு டிடிவி.தினகரன் கையில் அதிமுக வரும்..!

1

பாஜக தலைமையில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேனி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர் , அமமுக சார்பில் டிடிவி தினகரன், தனது தொண்டரை நிறுத்தியிருக்கலாம். ஆனால் 400 இடங்களை பெற்று மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், அதில் தேனியின் குரலாக தானும் இருக்க வேண்டும் என்பதால் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக கூறினார்.

ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுகவும் ஒன்றுதான். கட்சியின் பெயர்களும் தொண்டர்களும்தான் வேறு, ஆனால் தலைவர்களும் அவர்களின் செயல்பாடுகளும் ஒன்றுதான் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வேட்பாளர்களும் இணைந்து செயல்படுகிறார்கள் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

மேலும் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரனின் கைக்கு வந்துவிடும் என்றும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்கு பிறகு அமமுகவுடன் இணைய போகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தேனி பரப்புரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like