1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவார் : எஸ்.வி.சேகர்..!

1

அண்ணாமலைக்கு தன்னை தவிர வேறு யாரும் பாஜகவில் இருப்பது பிடிக்காது என்று சாடிய எஸ்.வி.சேகர்,10 வருடமாக துப்பாக்கியை பிடித்தேன் எனக் கூறும் அண்ணாமலை, ஒரு முறையாவது டிரிக்கரை அழுத்தியிருப்பாரா என வினவினார்.

ஏடிஎம் வாசலில் நிற்கும் காவலாளி கையில் கூடத்தான் துப்பாக்கி இருக்கிறது என்று அண்ணாமலையை கலாய்த்த எஸ்.வி.சேகர், துப்பாக்கி பிடித்த கை என்று கூறினால் அண்ணாமலை என்ன பெரிய ஆளா என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பினார். அண்ணாமலையின் வாய்ச்சவடால் பாஜகவுக்கு தான் பின்னடைவை தரும் என்று கூறிய அவர் தனக்கென்று ஒரு மறைமுக அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். அண்ணாமலை இப்போது செய்து கொண்டிருக்கும் செயல்கள் எல்லாமே சுயநலத்துடன் தன்னுடைய பெயரையும், புகழையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்து கொண்டிருக்கிறார் எனவும் எஸ்.வி.சேகர் விமர்சித்தார்.

ஒரு பையன் தேர்வு எழுதுவதற்கு முன்பு நான் 100க்கு 100 வாங்கிவிடுவேன் என கூறுவான், கடைசியில் தேர்வு முடிவை பார்த்தால் தான் தெரியும் அந்தப் பையன் இரண்டரை மார்க் மட்டுமே வாங்கியிருப்பது என்று கூறிய எஸ்.வி.சேகர், அண்ணாமலை கதையும் இப்படித்தான் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் பாஜக வளர்ந்ததா வளரவில்லையா என்பது தெரிய வரும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “தமிழகத்தில் பாஜகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு அதிமுக வெளியேறிவிட்டது. இதனால் மோடிக்கு எந்த பாதிப்பும் இல்லை . அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவ, அற்ற ஒருவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு என்று கூறியுள்ளார்.

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் ஹாட்ரிக் பிரதமராக வருவது உறுதி. ஏனென்றால் இந்த கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அவருக்கு பெரிய அளவில் உதவி செய்ய போவது இல்லை .

மத்திய பிரதேச தேர்தல்களில் அண்ணாமலை பார்வையாளராக மாற்றப்படுவார் , விரைவில் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவார், அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்றவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு.

கூட்டணி பிளவுக்கு அண்ணாமலைதான் காரணம் என அதிமுக தரப்பில் இருந்து பாஜக தலைமைக்கு சொல்லி உள்ளனர். அண்ணாமலை கூட்டணி தலைவர்களை தவறாக விமர்சிக்கிறார் என்று கூறி உள்ளனர். அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லாததால் அவ்வாறு பேசி உள்ளார். அப்படிப்பட்டி ஒருவரை தமிழ்நாடு தலைவராக அமர்த்தியதுதான் தவறு.
அதை கட்சி மேலிடம் உணரும்.

கட்சித் தலைமை கூப்பிட்டு அண்ணாமலையை திட்டி இருக்கும்.ஆனால் இவர் கமலஹாசனுக்கு அறிவுரை சொல்லி வருகிறார். அண்ணாமலை தமிழ்நாட்டில் தலைவராக இருக்கும் வரை பாஜக பூஜ்ஜியம்தான் என கூறினார்.

Trending News

Latest News

You May Like