தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/e6ed7235016836b244362973d0116675.jpg?width=836&height=470&resizemode=4)
சாட்டை அடி போராட்டத்தில் ஈடுபடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதன்படியே இன்று (27.12.24) காலை 10:00 மணிக்கு கோவை விமான நிலைய சித்ராவில் இருந்த காளப்பட்டி செல்லும் சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் சாட்டை மூலம் தன்னைத் தானே ஏழு முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் தி.மு.க ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணியாமல் 48 நாட்கள் விரதத்தை ஆரம்பித்துக் கொண்டார்.
வருகிற பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்கு சென்று முருகனிடம் முறையிட உள்ளார்.
அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.