1. Home
  2. தமிழ்நாடு

வெளுத்து வாங்கிய அண்ணாமலை : நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்கிறார் விஜய்..!

Q

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தலைவர்கள், பெண்கள் உள்பட அக்கட்சி தொண்டர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அதில் நடிகர் விஜயின் தவெக, திமுக-வின் பி டீம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பள்ளிக்குழந்தைகள் மாதிரி அரசியல் செய்கிறது தவெக. சினிமா சூட்டிங்கில் பாட்டு பாடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்கிறார் விஜய். நான் களத்தில் இறங்கி போராட்டம் நடத்துகிறேன் களத்தில் நின்று பேசுகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்ன Work from home அரசியல் செய்கிறாரா?
விஜய்-க்கு 50 வயதில்தான் அரசியலில் வரவேண்டும் என்று தோன்றியதா. 30 வயதில் எங்கே சென்றார். நாடகம் பன்னுவது விஜய். விஜய் திமுக-வின் பி டீம்.
சூட்டிங்கில் உட்கார்ந்து அறிக்கை அனுப்பும் விஜய்-க்கு மக்களின் கஷ்டத்தை பற்றி என்ன தெரியும். சினிமாவில் புகைப்பிடிப்பது, மது குடிப்பது என நடிக்கும் விஜய்-க்கு டாஸ்மாக் குறித்து பேசுவதற்கு யார் உரிமை கொடுத்தது. ஒருநாள் குல்லா போட்டுக் கொண்டு இஃப்தார் விருந்தில் பங்கேற்றால் போதுமா.
என அண்ணாமலை கூறினார்.

Trending News

Latest News

You May Like