அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் பதவி..?
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் பேட்டியளித்தார்.
அப்போது, மத்திய இணை அமைச்சர் பதவி வரும் போது பெற்றுக் கொள்வேன். தற்போது, கூண்டுக் கிழியாக இருக்க விரும்ப வில்லை. ஜனாதிபதியின் குறிப்பு அரசமைப்பு பிரிவு 143-ஐ பயன்படுத்தி திரெளபதி முர்மு கேள்ளி எழுப்பி உள்ளார். அது சரியே.
ஓ.பன்னீர் செல்வம் எங்கள் கூட்டணியில் தான் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும் போது ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசுவார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது.
அனைத்து ஊர்களிலும் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கண்டிப்பாக மாற்றம் வரும். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்நாதன் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்று வருகிறார். இவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரிவு உபசார விழா வைத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஜெகன்நாதன் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்.