முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை கிண்டல்..!

சென்னையில் முதல்வர் மருந்தகத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். நீரிழிவு நோய்க்கான METFORMIN எனப்படும் மருந்து, தனியாரில் 70 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், முதல்வர் மருந்தகத்தில் வெறும் 11 ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'முதல்வர் மருந்தகங்களில் 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை தமிழக அரசு காப்பியடித்துள்ளது என அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக மீம்ஸ் ஒன்று சமூகவலைதளத்தில் பதிவிட்டு, 'நகல் என்றுமே அசல் ஆக முடியாது' என அண்ணாமலை கிண்டல் அடித்துள்ளார். இந்த மீம்ஸ் படத்தை பா.ஜ.,வினர் அனைவரும் பதிவிட்டு சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
நகல் என்றுமே அசல் ஆக முடியாது!
— K.Annamalai (@annamalai_k) February 24, 2025
A copy can never become an original! pic.twitter.com/Pgd5PG9gpY
நகல் என்றுமே அசல் ஆக முடியாது!
— K.Annamalai (@annamalai_k) February 24, 2025
A copy can never become an original! pic.twitter.com/Pgd5PG9gpY