1. Home
  2. தமிழ்நாடு

புயலை கிளப்பிய அண்ணாமலை! கந்து வட்டி கடனைத் தீர்க்கவே சட்டவிரோதமாகக் கிட்னி விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்..!

1

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாமக்கலில் வறுமை நிலையில் இருக்கக்கூடிய பலரின் கிட்னி திருடப்பட்டதாக கடந்த 5 நாள்களாக பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகிறது. நாமக்கல்லில் நடைபெற்ற கிட்னி திருட்டு சம்பவத்தில் திமுக நிர்வாகியாக இருக்கக்கூடிய திராவிட ஆனந்தம் என்ற நபருக்கு தொடர்பு உள்ளது. இவர் மூலமாகவே இந்த கிட்னி திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

 

மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்தும், திமுகவினருக்கு தொடர்புடைய இன்னும் சில மருத்துவமனைகளில் வைத்தும் தான் தங்களுடைய கிட்னி எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர். கடந்த 5 நாள்களாக கிட்னி திருட்டில் புரோக்கராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தனை திமுக அரசு கைது செய்யவில்லை. தனிப்படை அமைத்து தேடி வருவதாக காவல்துறை கூறுகிறது. ஆனால், திமுகவைச் சேர்ந்த திராவிட ஆனந்தன் அவருடைய வீட்டுக்கு பக்கத்திலேயே இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்து கொண்டிருக்கக் கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

 

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் திமுகவினராகவே இருக்கின்றனர். திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையே அவர்கள் இத்தகைய தைரியமான குற்றச் செயல்களில் ஈடுபட காரணம். அதனை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது போல முதல்வர் மு.க.ஸ்டாலினுடையசெயல்பாடும், காவல்துறையினுடைய செயல்பாடும் இருப்பதாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

தமிழகத்தில் கந்து வட்டி தடை சட்டம் இருக்கிறது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் கிட்னியை பறிகொடுத்தவர்கள் கந்து வட்டி கடனை தீர்ப்பதற்காகத்தான் சட்ட விரோதமாக கிட்னியை விற்பனை செய்ய முன் வந்துள்ளனர். விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை கந்து வட்டிக்கு உள்ளாக்கி பின்னர் கிட்னியை திருடும் கும்பலின் திகைக்க வைத்தது என்றும் இந்த ஒட்டுமொத்த வலைப்பினலும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. உடல் உறுப்பு திருட்டு என்பது உலக அளவில் பெரும் குற்றங்களில் ஒன்று.

அரசு மெத்தன போக்குடன் செயல்படக்கூடாது. அந்த குற்றத்தில் ஈடுபட்ட திமுக புள்ளிகளுக்கு குற்றத்துடன் உள்ள தொடர்புகளை உறுதிப்படுத்துவதாக திராவிட ஆனந்த செயல்பாடுகள் இருக்கின்றன என்றும் திராவிட ஆனந்தன் என்ற நபர் தனிப்பட்ட முறையில் இதை செய்திருக்க முடியாது முதல்வர் இனியும் தாமதிக்காமல் உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கிட்னி திருட்டு சம்பவத்துடன் கூடிய அந்த குற்றங்களை விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like