1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தெரிய துவங்கி உள்ளது - அண்ணாமலை..!

Q

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணியை பற்றி, கட்சியை பற்றி எனது கருத்துகளை பல முறை கூறியுள்ளேன்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நாட்டுக்கு பல சேவை செய்துள்ளார். அவர் நன்றாக இருக்கே வேண்டும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சார்ந்த மகளிர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசார் ஒரு தலை பட்சமாக இல்லாமல், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் யார் தவறு செய்தாரோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம், தி.மு.க., கூட்டணியில் உள்ளதால், ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து பா.ஜ., மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பேசி வருகின்றனர். போலீசாரும் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் ஒரு பக்கம் கோபத்தை சம்பாதித்து கொள்வார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் கோபத்தை சம்பாதித்து கொள்வார்கள். அதுபோல் நடக்காமல் ஜாக்கிரதையாக கவனமாக இருக்க வேண்டும்.
பா.ஜ.,வில் புதிய நிர்வாகிகள் வரும் போது, மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் புது நிர்வாகிகள் வருகின்றனர். இதற்கு முன்பு, வேலை செய்தவர்கள், ஒன்றிய, மாவட்ட அளவில் புதியவர்களுக்கு வழிவிட்டுள்ளனர். பா.ஜ.,வுக்கு ஒரு காலக்கெடு உள்ளது. இரண்டு முறை பணியாற்றியவர்கள் மாற்றுகிறோம். இந்த முறை ஒன்றிய, மாவட்ட தலைவர்களுக்கு 45 வயது என்ற காலக்கெடு வைத்து இருந்தோம். அனைத்து இடங்களிலும், பழைய நிர்வாகிகளும், புதிய நிர்வாகிகளும் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.நாட்டையும், கட்சியையும் சார்ந்து தொண்டர்கள் பணி செய்கின்றனர். பழையவர்கள், புதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பணி செய்கின்றனர்.
தேர்தல் சரியாக போய் கொண்டு உள்ளது.தி.மு.க., அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் தெள்ளத் தெளிவாக உள்ளோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒவ்வொரு நாளும் தி.மு.க., மெல்ல மெல்ல கீழே போய் கொண்டு உள்ளது. கூட்டணி கூட உடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படஆரம்பித்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. 2026 தேரதல் வரலாற்றில், அவர்கள் தேர்தல் வரலாற்றில் தி.மு.க.,வுக்கு மோசமாக இருக்கும். களத்தில் தெள்ளத்தெளிவாக உள்ளது .பெண்கள் பாதுகாப்பு, மாநில வளர்ச்சியின் கோட்டை விட்டார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like