1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலை மீது உபா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் - சமூக ஆர்வலர் பரபரப்பு புகார்..!

1

கோவை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

அந்தப் போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது வேலூரை சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் தனக்கு செல்போனில் அழைத்து, இரண்டு பேரை வெட்டி கொலை செய்ய இருப்பதாகவும் பின்னர் தனது குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படியும் அண்ணாமலையிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ வைரலாக பரவியது. முன்னதாக அண்ணாமலை கைது செய்யப்பட்டார் பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வன்முறையை உருவாக்கும் விதத்தில் பத்திரமாக பேசியதாக அவர் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்துவதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை முயற்சி செய்கிறார் அவரை கைது செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதை எடுத்து அவர் நிருபர்கள் இடம் பேசுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலூரில் இருந்து பாஜக தொண்டர் ஒருவர் தன்னை செல்போனில் அழைத்து பேசுகையில் இரண்டு பேரை வெட்டி கொலை செய்ய இருப்பதாகவும் கொலை செய்த பிறகு தனது குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும்படி கூறியதாகவும் அப்போது எழுச்சி வந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இதில் எழுச்சி வருவதற்கு என்ன உள்ளது. இது வன்முறையாகும். அண்ணாமலை இதன் மூலம் கோர்ட்டுக்கு யாராவது சரணடைய சென்றால் கொலை செய்ய வேண்டும் என்பதை மறைமுகமாக தூண்டுகிறார். எனவே அவரது பேச்சுக்காக அண்ணாமலை மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like