திருச்சியில் பாத யாத்திரைக்கு இடையே பரோட்டா சுட்ட அண்ணாமலை..!

தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
பாத யாத்திரைக்கு சென்று பொதுமக்களைச் சந்தித்த அண்ணாமலை, பரோட்டா சுட்டுத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள்#Thiruverumbur #EnMannEnMakkal #Annamalai pic.twitter.com/Y6RAvQOzWz
— En Mann En Makkal (@EnMannEnMakkal) November 8, 2023