ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணாமலை..!
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, 10-20 கணிணிகள், மற்றும் புரோஜக்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. இநத கணிணி மற்றும் புரோஜக்டர்கள் இயங்குவதற்காக பள்ளிகளில், பிராண்ட்பேண்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இணையத்தின் வேகம் குறைவாக இருந்ததால், அரசு பள்ளிகளில் 100எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட பிராண்ட்பேண்ட் இணைதள சேவையை, ரூ1500 கட்டணத்திற்குள் அமைத்துக்கொள்ள பள்ளிகல்வித்துறை அனுமதி வழங்கியது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 3700 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் சேவையான பாரத் ஃபைபர் (எஃப்டிடிஹெச்) இணைப்பு வழங்கப்பட்டது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த இணைப்புகளுக்கான கட்டணத்தை பள்ளிகள் முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகளில் இருந்து வர வேண்டிய இணைய சேவை கட்டணத்திற்கான நிலுவைத்தொகை ரூ1.5 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலுவைத்தொகை காரணமாக பள்ளிகளில், இணைதள சேவையை உடனடியக நிறுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசு உயர்நிலை, மேல்லைப் பள்ளிகளின் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் உள்ள பிராட்பேண்ட் சேவைக்கான நிதியானது சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கான சேவை கட்டணம் ரூ. 1.5 கோடி நிலுவையில் உள்ளதாகவும், அதை உடனே கட்டவில்லை எனில் சேவை துண்டிக்கப்படும் எனவும் பிஎஸ்என்எல் நிறுவனம் கடிதம் மூலமாக தெரிவித்தது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தனது 'எக்ஸ்' சமூவலைதளப் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில், இணையதள சேவைக்கான கட்டணம் பல மாதங்களாக செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளததாக தெரிய வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியுள்ளது. சுமார் ரூ.8.5 லட்சம் கோடி வரை கடனில் உள்ளது தமிழகம். வாங்கும் கடன் முழுவதும் அன்றாடச் செலவுகளுக்குதான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணையளதள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், தி.மு.க. அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜி.எஸ்.டி.யில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70 சதவீதம் நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? திவாலாகும் நிலையில் தமிழக அரசு இருக்கிறதா? என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''தமிழகத்தில் எந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் இணைய இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. கடந்த மார்ச் முதல் இதுவரை ரூ.2,151 கோடியை மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்காமல் உள்ளது. ஆனாலும், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 43 லட்சம் மாணவர்களின் நலனுக்காக எந்த சம்பள நிலவையோ, கட்டண நிலுவையோ இல்லாமல் மாநில அரசு நிதியில் இருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள் வரை அனைத்தையும் செலுத்தியுள்ளோம்'' என்றார்.
தொடர்ந்து இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில்,அரசுப் பள்ளிகளுக்கான இணையதள சேவைக்கான கட்டணம் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியதும், கடந்த இரண்டு நாட்களாக, நிலுவை இல்லை என்று கூறிக் கொண்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கட்டண நிலுவை இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்த பின்னர், அவசர அவசரமாக, நிலுவையில் உள்ள மொத்தத் தொகையையும் வழங்கிடப் பள்ளிக் கல்வித்துறை மூலம் இன்று ஆணை பிறப்பித்துள்ளார்.
அமைச்சருக்குத் தனது துறை சார்ந்த பணிகள் குறித்த விவரங்கள் தெரியவில்லையா அல்லது வேண்டுமென்றே இரண்டு நாட்களாகப் பொய் கூறி வந்தாரா?
நாட்டின் வருங்காலமான மாணவ சமுதாயத்துக்குப் பொறுப்பான துறை என்பதை நினைவு வைத்திருந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செயல்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுப் பள்ளிகளுக்கான இணையதள சேவைக்கான கட்டணம் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியதும், கடந்த இரண்டு நாட்களாக, நிலுவை இல்லை என்று கூறிக் கொண்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கட்டண நிலுவை இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்த பின்னர், அவசர அவசரமாக, நிலுவையில் உள்ள மொத்தத்… pic.twitter.com/DGjH7QiHR3
— K.Annamalai (@annamalai_k) December 23, 2024
அரசுப் பள்ளிகளுக்கான இணையதள சேவைக்கான கட்டணம் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியதும், கடந்த இரண்டு நாட்களாக, நிலுவை இல்லை என்று கூறிக் கொண்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கட்டண நிலுவை இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்த பின்னர், அவசர அவசரமாக, நிலுவையில் உள்ள மொத்தத்… pic.twitter.com/DGjH7QiHR3
— K.Annamalai (@annamalai_k) December 23, 2024