1. Home
  2. தமிழ்நாடு

வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற கருத்துகளைக் கூறி வருகிறார் அண்ணாமலை : எடப்பாடி பழனிசாமி..!

1

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி. யாருக்கு யார் போட்டி என்பது மக்களவைத் தேர்தலின் போது தெரியும். யார் எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்; அண்ணாமலை சொல்வது அவரது கருத்து. தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது.

வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற கருத்துகளைக் கூறி வருகிறார் அண்ணாமலை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை தெளிவுப்படுத்திவிட்டோம். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து அ.தி.மு.க. தொடர்ந்து கேள்வி எழுப்பும். பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை முன் வைக்காமலேயே தேர்தலைச் சந்திக்கின்றனர்.

அரசின் தலைமை சரியில்லை; தலைமை சரியாக இருந்திருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. ஒட்டுமொத்த தி.மு.க. அரசே குளறுப்படியாகத் தான் உள்ளது. பிரச்சனைகளை சமூக வலைத்தளங்களில் எடுத்து சொன்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. டிடிவி தினகரனின் கட்சி இந்த தேர்தலுடன் முகவரி தெரியாமல் போய்விடும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது போல் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது அரசின் கடமை” என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like