அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் அண்ணாமலை..!

மதுரை மாவட்டத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திடீங்க. இனி தமிழ்நாட்டிற்கு எப்போது பெருமை சேர்க்க போறீங்க என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி காய்நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் அண்ணாமலையின் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.