ஒரு கட்சியின் மாநில தலைவர் போல அண்ணாமலை செயல்படவில்லை - ஜெயக்குமார்..!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
அண்ணாமலை ஒரு புள்ளி ராஜா ஆகிவிட்டார். புள்ளி விவரம் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரியாக செயல்பட்டாரே தவிர, ஒரு கட்சியின் மாநில தலைவர் போல அண்ணாமலை செயல்படவில்லை. 2014ல் இதேபோல, அதிமுக தனியாக நின்றது. பாஜகவுடன் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தார்கள். அப்போது வாங்கிய ஓட்டை விட பாஜக கூட்டணி குறைவாகவே ஓட்டு வாங்கியுள்ளது. 10 வருடங்களில் பாஜக வாக்கு குறைந்துள்ளது. பிரதமர் மோடியை 8 முறை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தும் ஒரு சீட் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை. இத்தனைக்கும் பாஜகவின் ஸ்ட்ராங் பெல்ட்டாக இருக்கும் கன்னியாகுமரியிலேயே வர முடியவில்லை. பாமக வலுவாக இருக்கும் தருமபுரியிலும் பாஜக கூட்டணியால் ஜெயிக்க முடியவில்லை. பாஜகவுக்கு ஒரு வளர்ச்சியும் இல்லை.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணி தோற்றுக்கொண்டே தான் இருக்கும். அதேபோலத்தான் பாஜக ஆர்சிபி அணியைப் போல தோற்றுக் கொண்டே இருக்கும். நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல. 30 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். பல தேர்தல்களில் வென்றோம், சிலவற்றில் தோற்றோம், வரும் தேர்தலில் மீண்டும் வெற்றியை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.