1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் அண்ணாமலை போட்டி! பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

1

தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். நீலகிரி (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ ராசாவை எதிர்த்து எல்.முருகன் களம் காண்கிறார். மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம், வேலூரில் ஏசி சண்முகம் போட்டியிடுகின்றனர்.

கிருஷ்ணகிரி தொகுதியில் நரசிம்மன் களம் காண்கிறார். பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார்.

தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார். 

1

Trending News

Latest News

You May Like