கோவையில் 73 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் அண்ணாமலை..!

கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 73 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். தாலியை எடுத்துக் கொடுத்து மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை வாழ்த்தினார்.
விழாவில் திருமணம் செய்து கொண்ட 73 ஜோடிகளுக்கும் 73 விதமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தலா ஒரு நாட்டு மாடு மற்றும் கிரைண்டர், மிக்சி, பீரோ, கட்டில், மெத்தை, குத்துவிளக்கு, பூ, பழம், காய்கறிகள், பாய், வீட்டு பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. அவற்றை புதுமண தம்பதிகளுக்கு அண்ணாமலை வழங்கினார்.