7 தமிழர்கள் உயிரிழப்பு - அண்ணாமலை இரங்கல்..!

குவைத் தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்..
இந்நிலையில், அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளவது குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளித்தது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்து குறித்த செய்தியறிந்ததும், துரிதமாகச் செயல்பட்டு, உயிரிழந்தவர்கள் உடல்களை தாய்நாட்டுக்குக் கொண்டு வர உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக சார்பில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் திரு தீனா
அவர்கள் தலைமையில், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளித்தது. அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) June 14, 2024
விபத்து குறித்த செய்தியறிந்ததும், துரிதமாகச் செயல்பட்டு, உயிரிழந்தவர்கள்…