1. Home
  2. தமிழ்நாடு

முதல்வருக்கு அண்ணாமலை சவால்..!

Q

கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா பீளமேட்டில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் அலுவலகத்தை பார்வையிட்டார். கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், பா.ஜ., எம்.எல்.ஏ., மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: பா.ஜ., தேசிய தலைவர் நட்டா 5 வருடங்களாக நம்மை வழிநடத்தி கொண்டு இருக்கும் வேளையில், ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ., ஆட்சியை பிடித்து கொண்டு இருக்கிறது. அதற்கு முன், தேசிய தலைவராக இருந்த அமித்ஷா எல்லா மாநிலங்களிலும் பா.ஜ., அலுவலகம் இருக்க வேண்டும். அலுவலகம் கோவிலாக, வீடாக இருக்க வேண்டும். இதற்கு மக்கள் உரிமையோடு வர வேண்டும்.

எல்லா பா.ஜ., அவலகத்திலும் நூலகங்கள் இருக்கிறது. நாம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் நமது மீது கல்லையும், மண்ணையும் வீசுகிறார்கள். பா.ஜ.,வின் வளர்ச்சி தமிழகத்தில் மக்கள் மனதில் எல்லாம் தங்க ஆரம்பித்துவிட்டது. எல்லா இல்லங்களிலும் நமது பிரதமர் மோடி குடியிருக்கிறார். எதிர்க்கட்சியினரால் மக்களிடம் பேச முடியவில்லை. அவர்களின் எந்தவொரு திட்டமும் மக்கள் பக்கத்தில் போக முடியவில்லை.

பிரதமர் மோடி நடுத்தர மக்களுக்காக கஷ்டப்பட்டு யோசித்து மருந்தகத்தை ஆரம்பித்தால் தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால் காப்பி அடித்து முதல்வர் மருந்தகம் என்று ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். பிரதமர் மோடி தனது பெயரை எந்த திட்டத்திற்கு வைத்தது இல்லை. நாம் கடுமையாக பாடுபட்டு கொண்டு இருக்கிறோம். அதற்கு பரிசு கைது. ஒவ்வொரு நாளும் ஏதோ இடத்தில் பா.ஜ,வினர் கைது செய்யப்படுகிறார்.

2026ல் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.,வினர் தெளிவாக இருக்கிறார்கள். வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய இயக்கம் தி.மு.க., பட்டப்பகலில் முதல்வர் ஸ்டாலின் கபட நாடகம் போடுகிறார். ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறுகிறார். 3வது முறையாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி துவங்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் தமிழ் கெட்டுவிட்டது. தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது.

முதல்வர் ஸ்டாலின் நடத்தும் சொந்த பள்ளியில் ஹிந்தி திணிக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நல்லா கே ட்டு கொள்ளுங்கள். தமிழகத்தில் நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும், 2026ல் நீங்க வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. அதுவரைக்கும் நீங்க குட்டிக்கரணம் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மனிதன் எந்த வேலையும் இல்லை என்றால் எதையும் செய்ய துணிவார்கள் என்பதற்கு உதாரணமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுவிட்டார். 2026ல் மம்தா பானர்ஜியும், முதல்வர் ஸ்டாலினுடன் வீட்டிற்கு செல்ல போகிறார். அன்றைக்கு இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்க தான் போகிறது. புதிய தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நமது கடமை. நம்மிடம் புதிய தலைவர், பழைய தலைவர் என்று வேறுபாடு இல்லை. ஒற்றுமையாக நாம் இணைந்து பாடுபட வேண்டும். கண் முன்னால் வெற்றி தெரிகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் அனைவரும் தீர்க்கமாக, கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Trending News

Latest News

You May Like