நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு அண்ணாமலை சவால்..!

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், "நிறைய கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்கிறார்கள். சுயநலவாதிகள் அல்லது குடும்ப ஆட்சி செய்பவர்கள் அல்லது ஊழல் செய்பவர்கள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிச்சயமாக செலவினங்களை குறைப்பது மட்டுமல்ல. பத்திரிக்கையாளர்களின் சுமையைக் குறைப்பதற்காகவும் தான்.
ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த தேர்தல் முறையானது பல நாடுகளில் உள்ளது. இதனால், அதிகாரிகளின் பணிச்சுமை குறையும். குடும்ப அரசியலை ஆதரிக்கும் சுயநலவாதிகள் தான் இதனை எதிர்க்கிறார்கள்" என்றார்.
சோனியா காந்தியின் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கூட்டணி. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருப்பவர்கள் தான் இந்தியா கூட்டணியில் முன்னிலையில் நிற்கிறார்கள்.
மேலும் அவர்,"நாம் தமிழர் கட்சி சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. அவரை யாரையும் சேர்க்கவில்லை என்பது தான் காரணம். அவருடைய சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.தேர்தலில் சீமானை விட 30 சதவீதம் வாக்குகள் அதிகமாக வாங்கி காட்டுகிறோம். கட்சி அடிப்படையில் சீமானுக்கும், எங்களுக்கும் முரண்பாடு இருந்தாலும் திமுகவை எதிர்க்க சீமான் வேண்டும்" என்றார்.