1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் தமிழகம் முழுவதும் அண்ணாமலை பிரச்சாரம்..!

1

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறங்கினாலும், தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

அதன்படி  அவர் வரும் 29-ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை பகுதிகளிலும், 30-ம் தேதி, சிதம்பரம், நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சியிலும், 31-ம் தேதி கரூரிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

தொடர்ந்து 31-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையில் தான் போட்டியிடும் கோவை தொகுதியில் அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார். இதையடுத்து 4-ம் தேதி- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகரிலும், 5-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் மீண்டும் கோவையில் வாக்கு சேகரிக்கிறார். 9-ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலையிலும், 10-ம் தேதி நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சியிலும், 11-ம் தேதி கோவை, 12-ம் தேதி கோவை, நீலகிரியிலும் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதன் பின்னர் பிரசாரம் முடிவடையும் வரையில் கோவையிலே முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். 

Trending News

Latest News

You May Like