பாஜக மகளிரணியின் நீதிப்பேரணி - அண்ணாமலை அறிவிப்பு..!
அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான ஞானசேகரன் என்பவர், தி.மு.க.வை சார்ந்தவர் என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியது. எனினும், இந்த குற்றச்சாட்டை திமுக மறுத்துள்ளது.
இந்த சூழலில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியும், இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்து தன்னை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை அண்ணாமலை நடத்தியிருந்தார்.
இந்நிலையில், பாஜக மகளிரணி சார்பில் வரும் 3ம் தேதி பேரணி நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மதுரையில் தொடங்கும் பேரணி சென்னையில் நிறைவுபெறும் என்றும், பேரணி நிறைவு பெறும் நாளில் ஆளுநரை சந்தித்து மனு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, @BJP4Tamilnadu மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் திருமதி @UmarathiBJP அவர்கள் தலைமையில்,… pic.twitter.com/BwFLPcXAg0
— K.Annamalai (@annamalai_k) December 31, 2024