1. Home
  2. தமிழ்நாடு

அன்னை இல்லம் ஜப்தி வழக்கு : பயில்வான் ரங்கநாதன் சொல்வதென்ன ?

1

யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதாக வந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, நடிகர் பிரபு பதில் மனு தாக்கல் செய்தார்.. அதில், அன்னை இல்லத்துக்கும், என் அண்ணன் ராம்குமாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் நான்தான் என்று பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, ஜப்தி நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் தொடர்ந்து கேஸ் நடந்தது.. அந்த வழக்கு நேற்று கோர்ட்டுக்கு வந்தபோது நீதிபதி பிரபுவிடம், "நீங்கள் அந்த கடனை செலுத்திவிட்டு, அந்த பணத்தை உங்கள் அண்ணனிடம் வாங்கி கொள்ளலாமே" என்று ஆலோசனை சொன்னார். அதற்கு பிரபு, "அன்னை இல்லம் கடன் மட்டுமேயில்லை, இதுபோல பல இடங்களில் அண்ணன் ராம்குமார் கடன் வாங்கியிருக்கிறார். யார் யாருக்கு அவர் கடன் தர வேண்டும் என்று முழுமையாக தெரியாது. அப்படியிருக்கும்போது, அண்ணன் ராம்குமார் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்று பதிலளித்துள்ளார்.

நீதிமன்றத்தில் பிரபு எடுத்துரைத்த இந்த வாதம் சரியானதே.. தாய் சேய் என்றாலும், வாயும் வயிறும் வேறுதான்.. உடன்பிறந்தவர்கள் என்பதாலேயே அண்ணன் கடனுக்கு தம்பி பொறுப்பாளி ஆக முடியாது.. சிவாஜி கணேசன் ஏற்கனவே உயில் எழுதியிருக்கிறார்.. தன்னுடைய 2 மகன்கள், 2 மகள்களுக்கும் சொத்துக்களை பிரித்து வைத்து எழுதியிருக்கிறார்.

இதற்கு நடுவில்தான், சகோதரிகளுக்கு, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு வந்தது.. சிவாஜி கணேசன் உயில் பொய்யானது என்று சிவாஜி மகள்கள் சொன்னார்கள். இதனால், பிரபு, ராம்குமார் மீது 2 சகோதரிகளும் புகார் தந்தார்கள்.. பிறகு 4 பிள்ளைகளுமே உட்கார்ந்து சமரசம் பேசி, சொத்தை பிரித்து கொண்டார்கள். இன்னாருக்கு இன்ன சொத்து என்று நால்வருக்குள் பிரிக்கப்பட்டு விட்டது. அந்தவகையில்தான், அன்னை இல்லம் பிரபுவுக்கு வந்து சேர்ந்துள்ளது.. அப்படி கையில் வந்துள்ள அன்னை இல்லத்தை, எப்படி அண்ணனுக்கு தர முடியும்?

எனினும் இதெல்லாம் சிவாஜி கணேசன் பிள்ளைகளுக்குள் நடக்கும் சொத்து விவகாரம். யாருமே அதற்குள் தலையிட்டு விமர்சிக்க முடியாது.. ஆனால், சிவாஜி கணேசனை நான் விமர்சித்ததாக, சிவாஜி ரசிகர்கள் கோபப்படுகிறார்கள். எனக்கு போன் செய்து திட்டுகிறார்கள்.. நான் வெறும் செய்தியைதான் சொல்கிறேன்.. இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை.. எப்போதுமே சிவாஜி கணேசன் பற்றி நான் துளிகூட தவறாக சொன்னதில்லை, சொல்லவும் மாட்டேன்" என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like