இனி இந்த 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்..!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பெரும்பாலான திருக்கோயில்களில் தினமும் ஒருவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் ஆலயம், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம், கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணிஅம்மன் ஆலயம் உள்ளிட்ட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.