1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுதினம் 234 சட்டப்பேரவை தொகுதியிலும் அன்னதானம்... தமிழக வெற்றிக்கழகம் அறிவிப்பு!

Q

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை துவங்கி இருந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலக பட்டினி தினமான மே 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் அறிவுறத்தலில் பேரில் இந்த அன்னதானம் வழங்க உள்ளது. மேலும், பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like