நாளை நடக்க இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளவது , வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும்.
புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நாளை(நவ.30) நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.