1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்கள் கடும் அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு..!

1

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை 400க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், இறுதியாண்டுக்கான ப்ராஜெக்ட் கட்டணம், சான்றிதழ் என்பது தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது திடீரென்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தேர்வுக்கட்டணம், ப்ராஜெக்ட் கட்டணம் உள்பட 6 வகையான கட்டணங்கள் அதிரடியாக 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

1

தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 50 சதவீதம் அதிகமாகும்.ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ. 2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like