1. Home
  2. தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! தமிழக அரசின் முடிவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! தமிழக அரசின் முடிவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு!


அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை சிபிஎம் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செங்கோடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், நீட் தேர்வு வேண்டாம் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. ஒவ்வொரு ஆண்டும் நீட் தொடர்பான குளறுபடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நீட் தேர்வில் நீதிமன்றம் கூறியும் மத்திய பாஜக அரசு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை தராதது அவர்களுக்கு மட்டுமல்ல சமூக நீதிக்கு எதிரான ஒரு செயல்.என தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக செயல்படுகிறது. விவசாயம், வேளாண், வங்கி ஊழியர்கள் விவகாரம் என தொடர்ந்து மத்திய அரசு தமிழக மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் வஞ்சித்து வருகிறது என்றார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து என்பது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கைபடி கல்வியை வணிக மயமாக்கும் ஒன்று. சூரப்பா மாநில அரசை கேட்காமல் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவது கண்டிக்கத்தக்க செயல் என்றும், சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like