1. Home
  2. தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது; பிறகு எப்படி செங்கலை அகற்ற முடியும்?

Q

பாஜகவின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு பாஜகவின் தலைவர் பதவியில் இருந்து செல்லும் போது திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன் என்றார்.

மேலும் தமிழக ஆளுநராக ஆர்என் ரவியும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தின் உச்சத்தில்தான் பேயுள்ளார் என்றும் அண்ணாமலை காட்டமாக கூறினார். அண்ணமலையின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை அறிவாலயத்தின் சுவரை தொட்டுப்பார்க்கட்டும் என்றும் சவால் விட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திமுக தொண்டர்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து தமிழ்நாட்டு அரசியலை கரைத்துக் குடித்தவர்கள்,அண்ணாமலையை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. திமுகவின் ஆலயமாக கருதப்படுகிற அறிவாலயத்தை தொட்டு கூட பார்க்க முடியாத அவரால் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும். இரும்பு மனிதர் என போற்றப்படுகின்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 75 ஆண்டுகள் கடந்த திராவிட முன்னேற்ற கழகத்தை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்.

திமுகவை அழிக்க புறப்படுபவர்கள், தங்களின் அழிவுக்கு தொடக்கப்புள்ளி வைக்கின்றனர். இவருடைய ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் மிருக பலத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். முதலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை அண்ணாமலை மேற்கொள்ள வேண்டும்.

அவர் எங்கு நின்றாலும் தமிழ்நாட்டில் அவரே புறமுதுகிட்டு ஓடச் செய்ய திமுக கடைகோடி தொண்டனை நிற்க வைத்து முதல்வர் ஸ்டாலின் அவரை மண்ணை கவ்வ வைப்பார்.. இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like