பிரதமர் போட்டியிலிருந்து விலகினார் அனிதா இந்திரா..!

கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாகக் கொண்டவர் திருவாட்டி அனிதா இந்திரா. இவர் கனடிய பிரதமர் பதவிக்கு போட்டியிடயிருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்நாட்டு அரசாங்கத்தில் சுற்றுலா, உள்நாட்டு வர்த்தக அமைச்சராக அவர் பணியாற்றியுள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
குவீன்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம், டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டம், டொரான்டோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் பயின்றுள்ளார் திருவாட்டி அனிதா.
கனடிய பிரதமர் தேர்தலில், கோவை மாவட்டம் வெள்ளலூரைப் பூர்வீகமாகக் கொண்ட திருவாட்டி அனிதா இந்திரா போட்டியிடுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்திய ஊடகங்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. அவரது வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்புக் கட்டுரைகள் நாளிதழ்களில் அதிகம் வெளியாகின. தற்போது தேர்தலில் போட்டியிட மாட்டேன் என திருவாட்டி அனிதா அறிவித்துள்ளார்.