1. Home
  2. தமிழ்நாடு

குடியரசு தினத்தில் ஓடிடியில் வெளியாகிறது அனிமல்..!

1

டிசம்பர் 1ம் தேதி வெளியான அனிமல் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும் விமர்சன ரீதியாக நெகட்டிவாக பல கமெண்ட்ஸ்கள் வெளியாகின. அதிகளவில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச காட்சிகளும் சர்ச்சையாகின. இருப்பினும் அனிமல் படத்துக்கு இப்போது வரை ரசிகர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. அதனால் தான் ஓடிடி ரிலீஸ் தேதியையும் தாமதப்படுத்திக் கொண்டே போனது படக்குழு.

தற்போது அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் (ஜன) 26ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதனால் ஓடிடி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். திரையரங்குகளில் அனிமல் படத்தை பார்க்க தவறிய ரசிகர்கள் இப்போது ஓடிடியில் பார்க்க அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like