கடனை திருப்பிகேட்டதால் ஆத்திரம்.. மூதாட்டி எரித்து கொடூரமான முறையில் கொலை !
கடனை திருப்பிகேட்டதால் ஆத்திரம்.. மூதாட்டி எரித்து கொடூரமான முறையில் கொலை !

திருவண்ணாலை மாவட்டம் ஆரணி அருகே ஓண்ணுபுரம் ஊராட்சிக்கபட்ட தேவாங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராஜேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி மூதாட்டி வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட கண்ணமங்கல போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.
ஆனால் குற்றவாளி போலீசார் கையில் சிக்காமல் இருந்தார். மேலும் அவர் நகைக்காக கொல்லப்பட்டார் என்பதால், கொள்ளை கும்பல் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேதித்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், மூதாட்டியை அடிக்கடி சந்தித்து வந்த கணேசன் என்ற இளைஞர் மீது போலீசார் பார்வை திரும்பியது.
ஓண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளி கணேசன் என்பவர் மூதாட்டி ராஜேஸ்வரியிடம் கடன் பெற்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரித்தப்போது மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொணட்ர்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், மூதாட்டி கடனை திரும்பக் கேட்டு தொந்தரவு அளித்ததால் ஆத்திரமடைந்து இரும்புக் கம்பியால் அவரை அடித்துக் கொலை செய்ததாக கூறினார். தெரியவந்தது.
ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி அன்று நெசவு தொழில் செய்யும் கணேசனை கண்ணமங்கல போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
newstm.in