1. Home
  2. தமிழ்நாடு

10th, 12th முடித்தவர்களுக்கு கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி வேலை..!

1

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, இன சுழற்சி மற்றும் முன்னுரிமை விவரம் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்படும்.

பணியிடங்கள் விவரம்:

  • அங்கன்வாடி பணியாளர் - 138 இடங்கள்
  • குறு அங்கன்வாடி பணியாளர் - 14 இடங்கள்
  • அங்கன்வாடி உதவியாளர் - 133 இடங்கள்

கல்வித் தகுதி:

  • அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர்: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • அங்கன்வாடி உதவியாளர்: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • தமிழ் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர்: 01.04.2025 அன்று 25 வயது முதல் 35 வயது வரை (விதவைகள்/ஆதரவற்ற பெண்கள்/SC/ST வகுப்பினர் 25 முதல் 40 வயது வரை / மாற்றுத்திறனாளி: 25 முதல் 38 வயது வரை).
  • அங்கன்வாடி உதவியாளர்: 01.04.2025 அன்று 20 வயது முதல் 40 வயது வரை (விதவைகள்/ஆதரவற்ற பெண்கள்/SC/ST வகுப்பினர்: 20 முதல் 45 வயது வரை / மாற்றுத்திறனாளி: 20 முதல் 43 வயது வரை).
  • முன்னுரிமை:

25% காலிப் பணியிடங்களில் விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 4% காலிப் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

பணியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். 12 மாதங்கள் பணி நிறைவு செய்த பிறகு, ஊதியம் சிறப்பு கால முறை ஊதியமாக மாற்றப்படும்.

அங்கன்வாடி பணியாளர் (தொகுப்பூதியம்): மாதம் ஒன்றுக்கு ரூ.7700/-

12 மாதங்களுக்கு பின் சிறப்பு கால முறை ஊதியம்: ரூ.7700 - ரூ.24200 என்ற விகிதத்தில் வழங்கப்படும்.

குறு அங்கன்வாடி பணியாளர் (தொகுப்பூதியம்): மாதம் ஒன்றுக்கு ரூ.5500/-

12 மாதங்களுக்கு பின் சிறப்பு கால முறை ஊதியம்: ரூ.5700 - ரூ.18000 என்ற விகிதத்தில் வழங்கப்படும்.

அங்கன்வாடி உதவியாளர் (தொகுப்பூதியம்): மாதம் ஒன்றுக்கு ரூ.4100/-

12 மாதங்களுக்கு பின் சிறப்பு கால முறை ஊதியம்: ரூ.4100 - ரூ.12500 என்ற விகிதத்தில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, காலிப் பணியிடம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்று சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை/ஆதார் அட்டை, ஜாதி சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். விதவை, ஆதரவற்ற பெண் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் அதற்கான சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்: 23.04.2025

நேர்காணலின் போது அழைப்பு கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலுக்கு வராதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதள முகவரி https://kallakurichi.nic.in/ - ஐ பார்க்கவும்.

Trending News

Latest News

You May Like