அங்காடித் தெரு சிந்து திடீர் மரணம்- திரையுலகினர் அதிர்ச்சி..!!

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் நடித்து பிரபலமானவர் சிந்து. இவருடைய இயற்பெயர் கவுரி. எனினும் இவரை திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் ‘அங்காடித் தெரு’ சிந்து என்று தான் குறிப்பிட்டு வந்தனர்.
அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, அதித்யா வர்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் அங்காடித் தெரு சிந்து நடித்துள்ளார். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது, ஒருபக்கத்தில் மார்பகம் அகற்றப்பட்டது. அதையடுத்து தொடர்ந்து படங்களிலும் சீரியல்களிலும் நடித்தார். ஆனால் புற்றுநோய் பாதிப்பு மேலும் பரவியதை அடுத்து, மற்றொரு பக்கத்தில் இருந்து மார்பகமும் அகற்றப்பட்டது.
கடந்த சில நாட்களாக சென்னை கீழ்பாக்கத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிந்து, இன்று அதிகாலை 2.15 மணிக்கு காலமானார். அவருடைய உடல் வளசரவாக்கத்தில் இருக்கும் அன்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவருடைய மரணத்துக்கு பல்வேறு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.