1. Home
  2. தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்த அனீஷ் சேகர்..!

1

தமிழ்நாடு கேடர் 2011ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தற்போது எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அனீஷ் சேகர் தனது ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்துள்ளார்.

அனீஷ் சேகரை பொருத்தவரை ஏற்கனவே மதுரையில் ஆட்சியராக இருந்தவர். மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவர். அதேபோல பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் அவர் மதுரை ஆட்சியராக இருந்தபோது மேற்கொண்டுள்ளார். ஒரு துடிப்பான இளைஞராக பணியாற்றி வந்த அவர் தன்னுடைய சொந்த காரணத்திற்காக ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ELCOT மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்தியாவில் இருக்கக்கூடிய பதவிகளிலேயே அரசு பதவிகளில் மிக உயர்ந்த பதவி என்று சொன்னால் ஐஎஸ் தான். அந்த ஐஏஎஸ் பதவிக்கு சென்று வரவேண்டும் என்பதுதான் கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவாக இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு பத்தாயிரம் பேர் வந்து ஐஏஎஸ் தேர்வு எழுதி, அதன் இறுதியில் வெற்றி பெறக்கூடிய நிலை என்பது இருக்கிறது. அதற்கு பல கட்ட முயற்சிகள், ஆண்டு கணக்கில் படிப்பு, போன்ற எல்லாம் முடிந்து தான் அவர்கள் இறுதியாக ஐஏஎஸ் கனவை வெற்றி அடைகிறார்கள்.

அப்படி வந்த நிலையில் அவர் தனக்கு தனிப்பட்ட காரணங்கள் சில இருப்பதாகவும், அந்த காரணத்தினால் ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். ஏற்கனவே பல மாவட்டங்களில் துணை ஆட்சியர் ஆகவும், மதுரையில் ஆட்சியராகவும், தமிழக அரசின் பல துறைகளில் நிர்வாக ரீதியாகவும் பணியாற்றியுள்ள அனீஷ் சேகர் தனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சியில் இருந்து பணியாற்றியிருந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சொந்த காரணத்திற்காக விலகுவதாக அறிவித்த நிலையில், தற்போது மற்றொரு அதிகாரியும் ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like