உளவுத்துறை எச்சரிக்கை : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் உயிருக்கு ஆபத்து..!
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்த மத்திய உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பவன் கல்யாணின் உயிருக்கு ஆபத்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. சில சட்டவிரோத அமைப்புகளிடம் பவன் கல்யாண் பற்றிய பேச்சு வந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பவன் கல்யாணை தொடர்பு கொண்டு இதுகுறித்து எச்சரித்துள்ளதாகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்த குழுக்கள் யார் என்பது குறித்து இப்போது கூற முடியாது என்றும் உளவுத்துறை கூறியுள்ளது. தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாணுக்கு 24 மணி நேரமும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அச்சுறுத்தலைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பு Z பிரிவு வரை பலப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பவன் கல்யாணின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்திருப்பது ஆந்திர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாண் ரசிகர்களும் அவரது கட்சி தொண்டர்களும் கவலை அடைந்துள்ளனர்.
.png)