1. Home
  2. தமிழ்நாடு

தமிழக விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு..!

1

ஆந்திராவில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு, மக்களிடையே உரையாற்றியும் வருகிறார்.

குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- 8 வது முறையாக என்னை தேர்வு செய்தற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை தேர்வு செய்தற்கு கைமாறாக இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்ய இருக்கிறேன்.

ஆந்திர மாநிலத்தை கஞ்சா போன்ற போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன்.ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு. பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். 

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது, பாலாற்றின் குறுக்கே சந்திரபாபு நாயுடு தடுப்பணை கட்ட முயற்சி செய்தார். இதற்கு ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றார்.அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like