காதலியை குழந்தைகளுடன் சேர்த்து ஆற்றில் தள்ளிவிட்ட கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் குண்டூரைச் செரெந்த சுகாசினிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அவருக்கு குடிவாடாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் கள்ள உறவு இருந்து வந்துள்ளது.
காதலி சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களை அழைத்துக் கொண்டு சுரேஷ் நேற்று அதிகாலை காரில் சென்றுள்ளார். வழியில் இருந்து கோதாவரி ஆற்றில் செல்ஃபி எடுக்கலாம் என்று கூறி மூவரையும் காரில் இருந்து கீழே இறங்கச் சொன்னார்.
சுகாசினியும் அவரது இரண்டு மகள்களும் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் போது, அவர்களை அப்படியே ஆற்றில் தள்ளிவிட்டுள்ளார் சுரேஷ். இதில் மூத்த மகள் கீர்த்தனா மற்றும் எப்படியோ தப்பித்துவிட்டார். ஆனால் சுகாசினியும், இரண்டாவது மகள் ஜெர்சியும் தண்ணீரில் விழுந்துவிட்டனர்.
அதை பார்த்ததும் சுரேஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துவிட்டார். குழந்தை கீர்த்தனா சுதாரிப்பாக, தன்னுடைய கையில் இருந்த போனில் 100 எண்ணுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிறுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் சுரேஷை விரட்டிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். ஆற்றுக்குள் விழுந்து தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்ட சுகாசினி மற்றும் ஜெர்சியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.