மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!

ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கப் பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் தங்கப்பாண்டியன். இவரின் மனைவியும் மகனும் கடந்த 15 தினங்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றுவந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களுக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
newstm.in