மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி !

தமிழகத்தில் கடந் சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்து வருகிறது.
நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனினும் கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், எம்பி, எம்எல்ஏக்கள் என பலரும் இப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டி.ஆர்.பி.ராஜா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
newstm.in