1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் 100 நாள்கள் அன்புமணி சுற்றுப்பயணம்..!

1

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ்   “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” என்ற சுற்றுப்பயணத்தின் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ்
அதன்படி, பாமக தலைவர் அன்புமணி நாளை மறுநாள் ஜூலை 25ம் தேதி  முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். திருப்பூரில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர், தர்மபுரியில் நவம்பர் 1ம் தேதியுடன் முடிக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் கூட்டணி ஆட்சி அமைக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப்பயணத்தின் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதன்படி ஜூலை 25 திருப்போரூர், 26-ல் செங்கல்பட்டு, உத்தரமேரூர், 27-ல் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், 28-ல் அம்பத்தூர், மதுரவாயல், 31-ல் கும்மிடிப்பூண்டி, ஆகஸ்ட் 1ம் தேதி திருவள்ளூர், திருத்தணிக்கும் பாமக தலைவர் அன்புமணி பயணம் செய்கிறார்.

அன்புமணி

பாமக கட்சியில் தலைவர் பொறுப்பிற்காக அப்பா – மகன் மோதலில்  அன்புமணியின் இந்த 100 நாள்கள் பயணம், அவரது செல்வாக்கை காண்பிக்கவே என கூறப்படுகிறது.  இந்தப் பயணம் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை வலுப்படுத்தவும்,  மக்களிடையே பாமகவின் கொள்கைகளைப் பரப்பவும்  முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Trending News

Latest News

You May Like