துலாபாரத்தில் அரிசி காணிக்கை வழங்கிய அன்புமணி- சவுமியா..!
இன்று ஆடி அமாவாசை.. இன்றைய தினம் ஏராளமான மக்கள் புனித ஸ்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா அன்புமணியுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்
அங்கு அவர்கள் துலாபாரம் கொடுத்தனர். துலாபாரம் என்பது தங்களின் எடைக்கு எடையாக வேண்டுதல்களுக்கு ஏற்ப கோவில்களுக்கு பொருட்களை வழங்கும் முறையாகும். அந்த வகையில் அன்புமணி ராமதாஸ் - சவுமியா அன்புமணி ஆகியோர் தங்களின் எடைக்கு நிகராக அரிசியை துலாபாரமாக வழங்கினர். துலாபார தராசின் ஒரு தட்டில் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் தனித்தனியாக அமர அவர்களின் எடைக்கு ஏற்க மற்றொரு தட்டியில் அரிசி வைக்கப்பட்டு துலாபாரம் கொடுக்கப்பட்டது.